<$BlogRSDURL$>

Tuesday, March 16

Trying to improve my blog 

மகிழ்ச்சிகரமான செய்தி... கொஞ்ச கொஞ்சமாய் வலைப்பதிவை சரி செய்துகொண்டிருக்கிறேன்.
|

உதிரிகள் 1 

ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், இந்த உதிரிகள் தலையெடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவரை பேச்சு மூச்சற்று இருக்கும் இந்த நபர்கள், திடீரென்று ஊடகங்களில் வித்யாசமாக போஸ்கள் கொடுத்துக்கொண்டு, அதிரடி அறிக்கைகள் விட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த தேர்தலில் தலைதென்படும் சில உதிரிகள்:

1. எம். நடராசன்

தமிழக வாரமிருமுறை இதழ்களில் இரண்டு வாரத்துக்கொருமுறை இவர் ஏதேனும் பேசுவார். இல்லை இவரது தொண்டரடிப்பொடிகளில் ஒருத்தர் பேசியதாக, செய்தி வரும். அல்லது, அதிபுத்தியாலி நிருபரின் தலையைச் சுற்றி முக்கைத் தொடும் கற்பனை ஒன்று வெளியாகும். இவரும் சலிக்காமல் ஊடங்களுக்குத் தீனி போடத் தவறுவதில்லை.

இந்தத் தேர்தலில், தான் பின்னணியில் செயல்பட்டது போதும், முன்னணிக்கு வருகிறேன் என்று ஓபன் அறிக்கை விட்டு, அதிமுக தனக்கு தேர்தல் சீட் வழங்கவேண்டும் கேட்டுக்கொண்டார். தஞ்சை, சென்னை என்று பிரும்மாண்ட புத்தக வெளியீட்டு விழாக்கள் வைத்து, ஆதீனங்கள், ஆசியோடு அரசியல் பேசும் அற்புதங்களையும் நடத்திக் காட்டினார். ஆனால், போயஸ் தோட்டக் கதவுகளை தட்ட அது சரியான வழியில்லை போலும். அம்மா கண்டுகொள்ளவில்லை.

2. சுப்பிரமணியம் சுவாமி

அதிமுக தனக்கு தேர்தல் சீட் தரும் என்ற நம்பிக்கை இவருக்கு இருந்ததாகத் தெரிகிறது. இப்போதும், திமுகவையும் கருணாநிதியையும் திட்டி அறிக்கைகள் அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு முறை அவரது அறிக்கைகளைப் படிக்கும்போதும், முன்பெல்லாம் சிரிப்பு வரும். இப்போது, லேசாக எரிச்சல் வருகிறது.
|

மக்களவைத் தேர்தல் 2004  

கொஞ்ச நாளாய் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன எழுதுவது என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. அதுவும் ஒன்றுக்கு இரண்டு வலைஇதழுக்கு ஆசிரியராக அமர்ந்துகொண்டிருப்பவனுக்கு, எழுதுவதே தொழிலாகக் கொண்டிருப்பவனுக்கு, இடம் ஒரு பொருட்டல்ல. இதன் காரணமாகவே, இதுநாள் வரை ஒரு வலைப் பதிவை ஆரம்பிக்காமல் இருந்தேன். எது எழுதினாலும், சி·பி தமிழ் வலைதளத்திலோ, சமாச்சார் தமிழ் வலைதளத்திலோ வெளியிட்டுக் கொள்ளும் வசதி இருக்கையில், வலைப் பதிவு வாசகர்களுக்கு என்ன புதிதாகத் தரப்போகிறேன் என்ற கேள்வியும் என்னை எழுதவிடாமல் செய்துகொண்டிருந்தது.

இந்திய மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்ததோ இல்லையோ, வழக்கம்போல், என் பரபரப்பும் கூடிப்போய்விட்டது. ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்கள், கருத்துக்கள், கணிப்புகள், போக்குகள், ஆற்றாமைகள், எதிர்பார்ப்புகள் என்று வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. மேலும், ஒவ்வொரு ஊடகமும் இந்தத் தேர்தலை தத்தமது வழியில் அர்த்தப்படுத்துவதும், அலங்காரப்படுத்துவதும், அர்த்தமிழக்கச் செய்வதை செய்துகொண்டே இருக்கின்றன.

இதைப் பற்றியெல்லாம் எழுதவேண்டும் என்று நினைத்தபோது, வலைப்பதிவு தொடங்குவதற்கான ஒரு உருப்படியான காரணம் கிடைத்தது. உடனே வழக்கம்போல், எனக்குள் இருக்கும் மற்றொரு பத்திரிகையாளன், என்னைப் பேட்டி எடுக்கத் தொடங்கிவிட்டான்.

ஆர்.வி.1: கடைசியில் நீயும் இந்தக் குட்டையில் விழுந்துவிட்டாயா? (ஹா ஹா ஹா) உன் அறிவின் விசாலத்தையும், ஞானத்தையும் தம்பட்டம் அடித்துக்கொள்ள வழிகண்டுபிடித்துவிட்டாய்? சரிதானே?

ஆர்.வி.2: யாருக்குத்தான் இந்த ஆசையில்லை. எழுதுவதே, அடுத்தவர் படிக்கத்தானே? எழுதுவதே, அடுத்தவர் மெச்சத்தானே? அதன் மூலம் என் அறிவின் கூர்மை வெளிப்படுமாயின், மகிழ்ச்சிதானே?

ஆர்.வி1: சரி, மக்களவைத் தேர்தல் பற்றி எழுதப்போகிறாயாமே? உனக்கு அரசியல் தெரியுமா? (ஹி ஹி ஹி)

ஆர்.வி.2: ஒரு நம்பிக்கைதான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தினமணி படிக்கிறேன். அப்பா வழியாக கொஞ்சம் கம்யூனிஸ்டுகளையும், கம்யூனிஸமும் கற்றவன். அதன் பின்னர், அதையெல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, முடிந்தவரை உலக இலக்கியமும் அரசியலும் படிக்க முயற்சித்திருக்கிறேன். தொடர்ந்து மூன்று நான்கு தேர்தல்களில் ஓட்டுப் போட்டிருக்கிறேன். இந்தத் தகுதி போதாதா?

ஆர்.வி.1.: சரி, புதிதாக ஏதாவது எழுதுவியா? இல்லை, அரைத்த மாவையே அரைப்பாயா?

ஆர்.வி.2: மாவு பழசாக இருக்கலாம். தோசை புதிதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆர்.வி.1: (ரகசியமாக) நிறைய பேர், நீ என்னவோ மேதாவி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொடர் மூலம் நீ ஒரு வெத்துவேட்டு என்ற குட்டு வெளிப்பட்டு விடப்போகிறது!!!

ஆர்.வி.2: நான் மேதாவி இல்லையென்பது எனக்கே தெரியும். அடுத்தவர்களுக்குத் தெரிவதில் எனக்கு பெரிய நஷ்டமொன்றுமில்லை.

ஆர்.வி.1: இந்தத் தொடரை எழுதி நீ என்ன சாதிக்கப் போகிறாய்?

ஆர்.வி.2: ஒன்றும் பெரியதாக இல்லை. எனக்கு எவ்வளவு அரசியல் தெரியும் எனக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ள இது உதவியாக இருக்கலாம் என்ற நப்பாசைதான். கூடவே, இதை அனைவரும் படிக்கும்போது, நிச்சயம் எதிர்வினை இருக்கும். அதன்மூலம் இன்னும் கொஞ்சம் அரசியல் கற்றுக்கொள்ளலாமே?

ஆர்.வி.1.: உனக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவே, தினமும் இந்த வலைப்பதிவை அப்டேட் செய்வியா?
ஆர்.வி.2: முயற்சிக்கிறேன்.

ஆர்.வி.1: தேர்தல் முடிந்தபின்னர், வலைப்பதிவைத் தொடர்வாயா?
ஆர்.வி.2: அதைப் பற்றி யோசிக்க இன்னும் நிறைய நாள்கள் இருக்கு. அப்போ பார்த்துக்கலாம்.

ஆர்.வி.1.: சரி, அரசியல் பேச ஆரம்பிச்சுட்ட. முதல் கேள்வி. தமிழ்நாட்டுல எந்தக் கூட்டணி ஜெயிக்கும்னு நினைக்கற?

ஆர்.வி2.: நான் சொல்றதுக்கு முன்னாடி மக்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு இங்க பாரு.

ஆர்.வி.1: பார்த்தியா, டகால்னு ஜகா வாங்கறியே?
ஆர்.வி.2: நிச்சயம் ஜகா வாங்கல, மே 10 வரைக்கும் இதைப் பத்திதானே பேசப்போறேன். கொஞ்சம் பொறுமையா பாரேன். இன்னிக்கே ஏன் அவசரப்படற?

|

This page is powered by Blogger. Isn't yours?


free hit counter
தேர்தல் செய்திகள்
களஞ்சியம்
Weblog Commenting and Trackback by HaloScan.com